ரயில் பயணத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதம் ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணி, அதனைப் பற்றிக் கேட்ட ஆண் பயணியை திட்டியதும், உயிருக்கு ஆபத்தான மிரட்டல் விடுத்ததும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், முன்பதிவு செய்யப்படாத இருக்கையில் அமர்ந்திருந்த பெண், அந்த இருக்கை தன்னுடையது என்று ஆண் பயணியிடம் வற்புறுத்தி பேசுவதை காணலாம். தனது இருக்கையிலிருந்து நகர மறுத்த அந்தப் பெண், பயணியை நோக்கி “இது உங்கள் அப்பாவுடைய சீட்டா?” என்று கடுமையாக வாக்குவாதம் செய்து திட்டுகிறார்.

 

இந்நிலையில், பயணி தன் டிக்கெட்டை காட்டும்படி கேட்டபோது, அந்தப் பெண் தலைப்பை மாற்றி, “நீங்கள் டிக்கெட் பரிசோதகரா? என்னிடம் டிக்கெட் கேட்க நீங்கள் யார்?” என்று கேள்வி கேட்டு மேலும் சண்டையை தூண்டியதாக வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதையே தொடர்ந்து என்னிடம் டிக்கெட் கேட்க உனக்கு எப்படித் துணிச்சல்? பாட்னாவில் உன்னை துண்டு துண்டாக வெட்டுவேன்) என்று அச்சுறுத்தல் விடுக்கும் அந்தப் பெண்ணின் நடத்தையைப் பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிகழ்வு தொடர்பாக, ரயில் பயணங்களில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு தடங்கல் ஏற்படுத்தும் பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்பு, பாதுகாப்பு முறை மற்றும் ரயில் ஒழுங்கு மீறல்கள் குறித்து இந்த சம்பவம் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.