உத்தரப் பிரதேசத்தில் முட்டை விற்பனை தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. நுகர்வோரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், இனி விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு முட்டையின் மீதும் அது இடப்பட்ட தேதி மற்றும் காலாவதியாகும் தேதி ஆகியவை அச்சிடப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் போலி அல்லது பழைய முட்டைகள் ‘புதிய முட்டை’ என்ற பெயரில் விற்கப்படுவதைத் தடுப்பதற்காக யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த புதிய விதியின்படி, காலாவதி தேதி குறிப்பிடப்படாத முட்டைகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் பண்ணையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிலையில் விதிகளை மீறி விற்கப்படும் முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும் அல்லது ‘மனித நுகர்விற்கு உகந்ததல்ல’ என்ற முத்திரை குத்தப்படும். சாதாரண வெப்பநிலையில் 30°C முட்டைகள் இரண்டு வாரங்கள் வரை மட்டுமே பயன்படுத்தத் தகுதியானவை என்பதால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இத்திட்டம் மிகவும் அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
