உலகப் பொருளாதாரத்தின் இதயத் துடிப்பான ஹார்முஸ் நீரிணையை ஈரானிடமிருந்து பாதுகாக்கத் தவறினால், ‘NATO’ அமைப்பின் எதிர்காலம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த நட்பு நாடுகள் கரம் கொடுக்க மறுப்பது, ஒட்டுமொத்த சர்வதேச பாதுகாப்பிற்கும் உலை வைக்கும் என அவர் ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார். குறிப்பாக, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட முக்கிய நாடுகள் அமெரிக்காவின் இந்தத் திட்டத்தைப் புறக்கணித்துள்ள நிலையில், ட்ரம்ப் தனது பாணியில் மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.
“இக்கட்டான நேரத்தில் உதவ முன்வராத நாடுகளை நான் நிச்சயமாக நினைவில் வைத்துக் கொள்வேன்; அதன் விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்” என அவர் கூறியிருப்பது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் போக்குவரத்தே முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ள சூழலில், ட்ரம்ப்பின் இந்த ‘பழிவாங்கும்’ பேச்சு சர்வதேச அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது!
