2026-ஆம் ஆண்டு நடைபெற்ற 98-வது அகாடமி விருதுகள் விழாவில், இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் ஆகியோர் ஒரு பெரும் விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பினர். இந்த விழாவில் சர்வதேசத் திரைப்படப் பிரிவில் விருதை அறிவிப்பதற்காக பிரியங்கா சோப்ரா வருகை தந்திருந்தார். சிவப்பு கம்பள வரவேற்பிற்கு முன்னதாக, அவர்கள் இருவரும் ஒரு கோல்ஃப் கார்ட்டில் அமர்ந்து விழா அரங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அந்த வாகனம் திடீரென ஒரு பக்கம் சாய்ந்து நிலைதடுமாறியது.
மேலும் பிரியங்கா அமர்ந்திருந்த இடதுபுறமாக வாகனம் பயங்கரமாகச் சாய்ந்ததால், அவர் கீழே விழுந்து பலத்த காயமடையக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உடனடியாக வாகனத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
🚨 EXCLUSIVE: Nick Jonas and Priyanka Chopra nearly had a wipeout before even hitting the red carpet at the Oscars … after their golf cart ride to the entrance got a little too wild. pic.twitter.com/nU4FSChlQH
— TMZ (@TMZ) March 15, 2026
“>
இந்தத் திடுக்கிடும் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 2026 ஆஸ்கர் போட்டியில் இந்தியத் திரைப்படங்கள் எவ்விதப் பரிந்துரையையும் பெறாத நிலையில், பிரியங்கா சோப்ராவின் இந்தப் பங்களிப்பும் அவர் தப்பிய இந்தச் சம்பவமும் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது. விழாவில் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் ஆகிய இருவருமே மிகுந்த பொலிவுடன் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
