தாய்லாந்தில் தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்த மனைவி, அவரை அந்தப் பெண்ணிற்கே ‘வாடகைக்கு’ விட முன்வந்த வினோத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குவான் என்ற அந்தப் பெண், தனது கணவர் ஒரு போலீஸ் அதிகாரி என்றும், அவர் நீண்ட நாட்களாக வேறொரு பெண்ணுடன் ரகசிய உறவில் இருந்ததை ஒரு தனியார் துப்பறியும் நிபுணர் மூலம் கண்டுபிடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கணவர் அந்தப் பெண்ணுடன் வாழ விரும்புவதை உணர்ந்த மனைவி, அதற்குப் பதிலாக அவர்கள் இருவரும் சேர்ந்து தனக்கு மாதம் 30,000 வாடகையாக’ வழங்க வேண்டும் என்ற வினோதமான நிபந்தனையை விதித்துள்ளார். இந்த விசித்திரமான ஒப்பந்தத்திற்கு அந்த கணவரின் காதலி சம்மதம் தெரிவித்த போதிலும், கணவர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் ஒரு பிரபல தாய்லாந்துத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட போது, சட்ட வல்லுநர்கள் இத்தகைய ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு நபரை வாடகைக்கு விடுவது போன்ற செயல்கள் தாய்லாந்தின் ஒருதார மணச்சட்டத்திற்கு எதிரானது என்றும், இது பொது ஒழுக்கத்திற்குப் புறம்பானது என்பதால் நீதிமன்றத்தில் சட்டப்படி செல்லாது என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்