எக்ஸ் தளத்தில் சமீபத்தில் வைரலாகி வரும் காணொளியில், சுரங்க ரயில் நிலைய மேடையில் நபர் ஒருவர் உடல்நலக்குறைவு அல்லது மயக்கம் காரணமாக நிலைதடுமாறி நடப்பது பதிவாகியுள்ளது. அங்கிருந்த பெண் ஒருவர், அந்த நபர் ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்து உடனடியாக அவசர உதவிக்கான கருவி மூலம் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்க முயன்றார். ஆனால், அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த நபர் எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் தவறி விழுந்தார்.

​இதைப் பார்த்த அந்தப் பெண் ஒரு நொடிக் கூடத் தாமதிக்காமல், தன் உயிரைப் பணையம் வைத்து தண்டவாளத்தில் குதித்தார். அவருக்கு உதவியாக அங்கிருந்த மற்றொரு நபரும் கீழே குதித்து, ரயில் வருவதற்குள் அந்த மனிதரை மீட்கப் போராடினார். பணியில் இல்லாத நேரத்திலும் மனிதாபிமானத்துடன் செயல்பட்டு ஒரு உயிரைக் காப்பாற்றிய அந்தப் பெண்ணின் துணிச்சலான செயல் இப்போது இணையதளங்களில் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.