வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் ஒதுக்கீட்டை வரும் மார்ச் 23, 2026 முதல் 50 சதவீதம் வரை உயர்த்தி மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, ஹோட்டல்கள், தாபாக்கள் மற்றும் உணவகத் துறையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, கூடுதல் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, உணவகத் தொழிலில் ஈடுபட்டுள்ள பலருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

​வணிக பயனர்கள் இந்த கூடுதல் சிலிண்டர் பலனைப் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களில் முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு பிஎன்ஜி (PNG) இணைப்புகளுக்கும் விண்ணப்பிக்குமாறு வணிகர்களுக்கு அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், உணவு சார்ந்த துறைகளில் நிலவும் சிலிண்டர் தட்டுப்பாடு பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.