இந்தியாவில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய நிதியாண்டு தொடங்க உள்ள நிலையில், ஹெச்டிஎப்சி (HDFC) மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) உள்ளிட்ட முன்னணி வங்கிகள் தங்களது ஏடிஎம் விதிகளை அதிரடியாக மாற்றியுள்ளன. குறிப்பாக, ஹெச்டிஎப்சி வங்கியில் இனி யுபிஐ (UPI) மூலம் எடுக்கும் பணமும் மாதந்திர இலவச ஏடிஎம் பரிவர்த்தனை கணக்கிலேயே சேர்க்கப்படும்.
இலவச லிமிட் முடிந்த பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 23 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், பஞ்சாப் நேஷனல் வங்கி தனது டெபிட் கார்டுகளுக்கான தினசரி பணமெடுக்கும் வரம்பைக் குறைத்துள்ளது. சில கார்டுகளில் ஒரு லட்சம் ரூபாய் வரை எடுக்க முடிந்த நிலையில், இனி 50,000 முதல் 75,000 ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி க்யூஆர் கோட் (QR Code) மூலம் பணம் எடுக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்கத் தங்களது வங்கி வரம்புகளை முன்கூட்டியே சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
