ஒருவர் தனது உடலில் 88 ஸ்பூன்களை பேலன்ஸ் செய்து உலக சாதனை படைத்தார்.

உலகில் பலரும் கின்னஸ் உலக சாதனைகளில் இடம் பெற தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். சமீபத்தில், ஈரான் கராஜ் நகரைச் சேர்ந்தசேர்ந்த அபோல்பசல் சபர் மொக்தாரி என்ற நபர், தனது உடலில் அதிக ஸ்பூன்களை பேலன்ஸ் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.

கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற பலர் போட்டியிடுகின்றனர். வித்தியாசமான திறமைகளை காட்டி சாதனை படைத்து வருகின்றனர். இந்நிலையில் அபோல்பசல் சபர் மொக்தாரி என்பவர் தனது உடலில் 88 ஸ்பூன்களை சமநிலைப்படுத்தி சாதனை படைத்தார். அவர் 2022 இல் தனது பெயரில் இருந்த 85 ஸ்பூன்களின் சாதனையை முறியடித்தார்.

“அவரது தனித்தன்மையின் ரகசியம், தனது உடலில் இருந்து ஆற்றலை பொருளுக்கு மாற்றுவதுதான்” என்று மொக்தாரி நம்புகிறார். கடந்த ஆண்டு அவர் கூறியதாவது, மொக்தாரி ஜிடபிள்யூஆரிடம் (கின்னஸ் அமைப்பு) கூறினார், “என்னிடம் உள்ள இந்த ஆற்றலை என்னால் அதற்கு (பொருட்களுக்கு) மாற்ற முடியும், அவற்றை என்னால் தொட்டு உணர முடியும், பின்னர் என்னால் முடிந்தவரை பொருட்களின் மீது கவனம் செலுத்த நான் என்னைத் தள்ளுகிறேன். என் உடலில், அதைத்தான் நான் செய்கிறேன்” என தெரிவித்தார்.

.”