அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 21 வயது கெனத் சிரிபோ என்ற இளைஞர், 36 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் செப்டம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில், நியூயார்க்கின் ஈஸ்ட் கன் ஹில் ரோடு அருகே உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் நடந்தது. கெனத், அந்தப் பெண்ணின் வாயை ஒரு கையால் அழுத்தி, மற்றொரு கையால் கழுத்தை நெறித்து, அவளை தரையில் தள்ளியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பின்னர், அவர் பெண்ணை மீண்டும் மீண்டும் குத்தியதாகவும், வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் கத்தி, நிறுத்துமாறு கெஞ்சியபோதும், கெனத் நிறுத்தவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.
பெண், இந்த தாக்குதலை நிறுத்துவதற்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டபோதும், அவர் தொடர்ந்து தாக்கியதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. தாக்குதலுக்குப் பிறகு, கெனத் பெண்ணின் 250 டாலர் (சுமார் 22,000 ரூபாய்) பணம், அடையாள அட்டை மற்றும் சாவிகள் இருந்த ஒரு கோச் பர்ஸ் மற்றும் பணப்பையை திருடி, கட்டிடத்திலிருந்து தப்பி ஓடினார். நியூயார்க் காவல்துறை (NYPD) வெளியிட்ட வீடியோவில், கெனத் தனது பேண்ட்டை மேலே இழுத்து, கழுத்தில் துண்டு கட்டியபடி கட்டிடத்தின் படிக்கட்டுகளில் இறங்கி ஓடுவது பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் பல காயங்கள், வீக்கங்கள் மற்றும் கடித்த காயங்கள் இருந்தன.
🚨WANTED FOR A Rape: on Sunday, September 28, 2025, at approximately 5:00 A.M., in the vicinity of East Gun Hill Road and Putnam Place, in the confines of the 52nd Precinct, a 36-year-old female victim was sexually assaulted by an unknown individual pic.twitter.com/hhkCCqUTZ3
— NYPD Crime Stoppers (@NYPDTips) September 29, 2025
அவர் நார்த் சென்ட்ரல் பிராங்க்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, தற்போது சீரான உடல்நிலையில் உள்ளார். கெனத் எப்படி அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தார் என்பது தெளிவாகவில்லை, ஆனால் அடுத்த நாள், செப்டம்பர் 29 அன்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள மற்றொரு கட்டிடத்தில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பாலியல் வன்கொடுமை, கொள்ளை போன்ற பல கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் 30,000 டாலர் ஜாமீன் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது.
