இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.  அதன்படி நடப்பாண்டிற்கான இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்.15 வரை தேசிய தேர்வு முகமை மேலும் அவகாசம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. https://neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் இளநிலை நீட் தேர்வுக்கு இன்று இரவு 11.30 மணிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இரவு 11.59 மணிக்கு விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.