உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ் அப்பில் போட்டோ அனுப்பும்போது HD என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதனை கிளிக் செய்து அனுப்பினால் அதோட clarity மாறாமல் அனுப்ப முடியும். இந்த புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் நேற்று கொண்டு வந்துள்ளது. உங்களின் வாட்ஸ் அப்பை ஒருமுறை அப்டேட் செய்து விட்டு இதனை முயற்சி செய்து பாருங்கள். இருந்தாலும் இதில் முழுவதுமாக அப்படியே ஒரிஜினல் கிளாரிட்டி உடன் புகைப்படம் சேர் ஆகாவிட்டாலும் ஓரளவுக்கு கிளாரிட்டியுடன் இருக்கும்.