இன்றைய காலகட்டத்தில் ட்விட்டர் செயலியை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய நிலையில் பல மாற்றங்களை செய்து வருகிறார். அதாவது ப்ளூ டிக் வைத்துக்கொள்ள மாதம் சந்தா கட்டாயம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு ட்விட்டர் லோகோ மாற்றப்பட்டது.

இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் தற்போது பயனர்களின் கணக்குகளை பிளாக் செய்யும் வசதியை விரைவில் நீக்க உள்ளதாக எலன் மஸ்க் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த புதிய மாற்றம் நடைமுறைக்கு வந்தால் இனி பயனர்கள் தங்களுக்கு தொந்தரவு தரக்கூடிய கணக்குகளை பிளாக் செய்ய முடியாது. அவர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளை மட்டுமே மியூட் செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் செய்தி பயனர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.