உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை தினந்தோறும் பயன்படுத்தி வரும் நிலையில் பயணங்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புது விதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதேசமயம் பயணங்களில் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ஏராளமான அம்சம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வாட்ஸ் அப் செயலியை யாரும் ஹேக் செய்ய முடியாத அளவுக்கு ஈமெயில் லாகின் செய்யும் வசதி வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது பயனர்கள் பழைய மொபைலில் இருந்து புது மொபைலுக்கு மாறும்போது வாட்ஸ் அப் செயலியில் உள்ள அனைத்து மெசேஜ்களையும் backup செய்து கொள்ளும் வகையில் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் சில நுணுக்கங்கள் செய்து தற்போது எளிமையாக க்யூ ஆர் கோடு மூலமாக பழைய மொபைலில் இருந்து புதிய மொபைலுக்கு அனைத்து மெசேஜ்களையும் பரிமாற்றம் செய்யும்படியான அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. மெசேஜ்கள் மட்டுமல்லாமல் பயனர்கள் மற்றொரு நபர்களுடனும் பகிர்ந்த புகைப்படம், வீடியோ மற்றும் லிங்க் என அனைத்து மெசேஜ்களையும் க்யூ ஆர் கோடு மூலமாக பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.