இன்றைய காலகட்டத்தில் whatsapp செயலியை தினந்தோறும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தரும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இதில் இதுவரை டெக்ஸ்ட் மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை மட்டும் அனுப்பி வந்த நிலையில் தற்போது சிறிய வீடியோ மெசேஜை அனுப்பும் வசதி வந்துள்ளது. வாட்ஸ் அப்பில் ஏற்கனவே வாய்ஸ் மெசேஜ் அனுப்பும்போது அதை சற்று நேரம் கிளிக் செய்தால் அங்கே கேமரா ஐகான் வரும். அதனைப் போலவே வாய்ஸ் மெசேஜ் போல பயன்படுத்தி யார் ஒருவரும் மிக எளிதாக ஒரு வீடியோ மெசேஜ் அனுப்பலாம். நான் பேசி அனுப்பக்கூடிய வீடியோ ஒரு வட்ட வடிவில் பெறுநர்களுக்கு கிடைப்பது கூடுதல் அம்சமாகும்.

அதிகபட்சம் 60 வினாடிகள் வரை ஒருவர் வீடியோ மெசேஜ் அனுப்ப முடியும். யாராவது எங்கே இருக்கிறீர்கள் என்று டெக்ஸ்ட் செய்தால் உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஒரு வீடியோவை எடுத்து அனுப்பலாம். வாட்ஸ் அப் அறிமுகம் செய்யப்பட்டது முதல் பல்வேறு அம்சங்களை பயனர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த வீடியோ மெசேஜ் ஆப்ஷன் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. Whatsapp அப்டேட் செய்தவர்களுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ள நிலையில் உடனே உங்க வாட்ஸ் அப்பை அப்டேட் செய்து இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.