இன்றைய காலகட்டத்தில் அனைவருமே செல்போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அப்படி மொபைல் பயன்படுத்தும் போது இன்டர்நெட்டின் வேகம் பிரச்சனையாக இருந்தால் அதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து இதில் பார்க்கலாம். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இன்டர்நெட் வேகமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது 5ஜி சேவையும் வந்துவிட்டது. நீண்ட காலமாக உங்களுடைய மொபைலில் கேச் கிளீனர் செய்யவில்லை என்றால் அதனை அழித்துப் பாருங்கள்.

கட்டாயம் உங்களுடைய இணையத்தின் வேகம் அதிகரிக்கும். ஸ்மார்ட் போனில் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் தேவையற்ற செயலிகளை close செய்தால் இணையத்தின் வேகம் அதிகரிக்கும். மொபைல் செயல்களை ஆட்டோ அப்டேட் செய்யும் ஆப்ஷன் ஆன் செய்திருந்தால் அதனை ஆப் செய்து விடவும். ஏனென்றால் ஆட்டோ அப்டேட் செய்வதற்கு மொபைல் டேட்டா அதிகமாக செலவாகும் என்பதால் இணையத்தின் வேகம் குறைந்து விடும்.

நீங்கள் பயன்படுத்தக்கூடிய browser லைட் வெர்ஷன் ஆக கிடைக்கும் என்பதால் அதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தினால் இணையத்தின் வேகம் அதிகரிக்கும். அதனைப் போலவே மற்ற செயல்களையும் லைட் வெர்ஷன் ஆக மாற்றிக் கொள்ளலாம். மொபைல் நெட்வொர்க் செட்டிங் இயல்பாக தானாகவே இயங்கக் கூடியதாக இருந்தால் இணைய வேகத்தை குறைக்கும். எனவே மொபைலில் நெட்வொர்க் செட்டிங்சை ரீசெட் செய்து பார்க்கலாம். இது உங்களுடைய போனின் இணைய வேகத்தை அதிகரிக்க உதவும்.