உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செய்தியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வரும் நிலையில் நீண்ட நாட்களாக பயணங்கள் எதிர்பார்த்து காத்திருந்த புதிய அம்சம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஒரே சாதனத்தில் பல whatsapp கணக்குகள் சுவிட்ச் செய்து பயன்படுத்த முடியும். அதனால் whatsapp பயனர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மல்டி அக்கவுண்ட் என்று அழைக்கப்படும் புதிய அம்சம் மூலமாக பயனர்கள் எளிதில் தங்களது அக்கவுண்டுகள் இடையே மாற்றிக் கொள்ள முடியும். இந்த புதிய அம்சம் முதல்கட்டமாக whatsapp ஆண்ட்ராய்டு பீட்டா பயணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீட்டா டெஸ்டர்கள் மல்டி அக்கவுண்ட் அம்சத்தை தங்களுடைய whatsapp செட்டிங்கில் உள்ள கியூ ஆர் கோடுக்கு அருகில் உள்ள ஐ காண கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு குறித்த அம்சம் வழங்கப்பட்டிருந்தால் மற்றொரு கணக்கை சேர்த்துக் கொள்ளலாம். புதிய வாட்ஸ் அப் கணக்கின் மொபைல் எண் மற்றும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும். மற்றொரு அக்கவுண்டுக்கு மாற்றிக்கொள்ள விரும்பினால் அதை மீண்டும் கிளிக் செய்து அந்த அக்கவுண்டுக்கு மாற்றிக் கொள்ளலாம். தற்போது இந்த புதிய அம்சம் பீட்டா வெர்ஷனில் மட்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில் மற்ற அனைவருக்கும் விரைவில் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.