மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரில் தலித் வாலிபரான நரத் ஜாதவ் என்பவர் வசித்து வந்தார். இவர் இந்திரகர் கிராமத்தில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று நரத் உறவினருக்கு சொந்தமான வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது கிராம தலைவர் பாதம் சிங், தனது உறவினர்கள் ஏழு பேருடன் வந்து வயலில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி அவர்கள் நரத் ஜாதவை கடுமையாக தாக்கினர். இதனால் படுகாயம் அடைந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நரத் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கிராம தலைவர் மற்றும் அவரது உறவினர்களை கைது செய்தனர்.