நேபாளத்தில் அரசியல் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வரும் சூழ்நிலையில், முன்னாள் பிரதமர் ஜலநாத் கனால் வீட்டில் நடந்த தீவிபத்து சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நாள், ஜலநாத் கனால் வீட்டை குறிவைத்து சில போராட்டக்காரர்கள் தீவைத்தனர். அந்த நேரத்தில் வீட்டுக்குள் இருந்த அவரது மனைவி ரபி லட்சுமி சித்ரகார், தப்பிக்க முடியாமல் தீக்குளியில் சிக்கிக்கொண்டார். உடல் முழுவதும் தீக்காயங்களுடன் அவசரமாக மீட்கப்பட்ட லட்சுமி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், சுயசிந்தனையற்ற நிலையில் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சம்பந்தமாக வெளியாகிய வீடியோவில், தீயில் சிக்கிய நிலையில் ராஜ்யலட்சுமி வலியைத் தாங்க முடியாமல் தவித்ததை பார்ப்போர் கண்களில் கண்ணீர் மல்கி விட்டது. சீனாவுக்கு நெருக்கமானவர் என்ற காரணத்துடன், ஜலநாத் கனால் ஆட்சிக்காலத்தில் ஊழல் நடைபெறியது எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதன் எதிரொலியாகவே, போராட்டக்காரர்கள் அவரது வீட்டு மீது தாக்குதல் நடத்தினர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் பரவியுள்ள மக்கள் கிளர்ச்சி, முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகளையும் இலக்காகக் கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
