கனடாவின் பிரின்ஸ் ஜார்ஜ் நகரில், செப்டம்பர் 5, 2025 அன்று ஒரு நபர் மது போதையில் குழந்தைகளுக்கான பிங்க் நிற பார்பி ஜீப் வாகனத்தை பிரதான சாலையில் ஓட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. காஸ்பர் லிங்கன் என்பவர், தனது நண்பரின் மகளுக்கு சொந்தமான இந்த பொம்மை வாகனத்தில், ஒரு குளிர்பானம் வாங்க செல்வதற்காக சாலையில் இறங்கினார். இவர் ஓட்டிச் சென்ற வாகனம் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது என்றாலும், பிரதான சாலையில் இது போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. இதை அறிந்த காவல்துறையினர், அவரை உடனடியாக நிறுத்தி விசாரணை செய்தனர்.

விசாரணையில், லிங்கனுக்கு ஓட்டுநர் உரிமம் முடக்கப்பட்டிருந்ததும், அவர் மது போதையில் இருந்ததும் றுதியானது. இரண்டு மூச்சுப் பரிசோதனைகளில் இவர் மது அருந்திய அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறியது தெரியவந்தது. இதனால், அவருக்கு 90 நாள் கார் ஓட்டத் தடை விதிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி, பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இருப்பினும், இது பொது பாதுகாப்புக்கு ஆபத்து என காவல்துறை எச்சரித்துள்ளது. லிங்கன், “மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்” என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.