மத்திய அமெரிக்க நாடான கொஸ்டா ரிகாவில் உள்ள உணவகத்தில் நடைபெற்ற திருட்டு முயற்சி, எதிர்பாராதவிதமாக ஒரு சினிமா போல் திருப்பம் பெற்றுள்ளது. காலை உணவுக்குப் பிறகு பில்லைக் கட்டிக்கொண்டிருந்த பெண்ணின் பேக்கை ஒருவர் திருட முயற்சி செய்தார். அப்போது அந்த பெண் திருடனை எதிர்த்து, சினிமா ஸ்டைலில் கட்டிப்பிடித்துள்ளார்.

 

வீடியோவில், அந்த பெண் ‘Triangle Choke’ எனும் பிடி முறையைப் பயன்படுத்தி திருடனை தரையில் வீழ்த்தி, கட்டி வைத்திருப்பதை காணலாம். திருடன் தப்பிக்க முயன்றாலும், அவரது பிடியிலிருந்து தப்ப முடியவில்லை. உணவக ஊழியர்கள் போலீசை அழைக்கும் வரை அந்த பெண், ஒரே கையால் அவனை நிர்வாகித்துள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த பெண் இதற்கான எந்தப் பயிற்சியையும் பெறவில்லை என்றும், இவை அனைத்தும் தன்னிச்சையாக நடந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.

இந்த வீடியோ X இல் @PicturesFoIder என்ற கணக்கிலிருந்து பகிரப்பட்டு வருகிறது. இதுவரை 2.23 லட்சம் பேர் பார்த்து, அந்தப் பெண்ணின் தைரியத்தையும் புத்திசாலித்தனத்தையும் புகழ்ந்துள்ளனர். “இனி திருட முயற்சி செய்வாயா?” என்று ஒருவர் கமெண்ட் போட்டிருந்தால், “பெண்கள் பலவீனம்னு நினைச்சு தவறு பண்ணிட்டான்!” என இன்னொருவர் எழுதியுள்ளார். சமூக வலைதளங்களில் பிரபலமான இந்த வீடியோ, பெண்களின் தைரியத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றே சொல்லலாம்.