இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் நாளுக்கு நாள் புதிய அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது. வாட்ஸ் அப் நிறுவனம் சைபர் குற்றங்களை மனதில் வைத்து பல வசதிகளை வழங்குகின்றது. அப்படியான நிலையில் உங்களின் பணி உரிமை குறித்து நீங்கள் கவலைப்படுவதால் whatsapp உங்களுக்காக பல அம்சங்களை வழங்கியுள்ளது. பயனர்களின் பாதுகாப்பை கடுமையாக்கும் வகையில் whatsapp சிறப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த தனி உரிமை அம்சங்கள் பற்றி பலரும் அறியாமல் உள்ளனர்.

Chat lock:

உங்களின் தனிப்பட்ட சாட்டை லாக் செய்யும் வசதியை சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. நீங்கள் யாருடைய மெசேஜை மறைக்க விரும்புகிறீர்களோ அவர்களின் ப்ரொபைல் பகுதிக்குச் சென்று chat lock என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Hide Blue Tick:

ப்ளூடூத் மறைப்பதற்கான விருப்பத்தையும் whatsapp வழங்கியுள்ள நிலையில் அனுப்புனருக்கு நீங்கள் அவருடைய செய்தியை படித்தீர்களா இல்லையா என்பதை அறிய முடியாது. நீங்கள் நீல நிற டிக்கை மறைத்தால் உங்களாலும் வேறு யாருடைய செய்திகளும் ப்ளூ டிக்கை பார்க்க முடியாது .

Silent unknown number:

உங்களின் தொலைபேசி எண்ணை வைத்திருக்கும் எவரும் உங்களை அழைக்கும் போது உங்கள் தனி உரிமை அமைப்புகளை மாற்றுவதன் மூலம் தெரியாத தொலைபேசி எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை தடுக்க முடியும்.

Hide status, profile:

நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொடர்புகளில் இருந்து status, profile picture and last scene நேரத்தை மறைத்துக் கொள்ள முடியும். சுயவிவர புகைப்படங்களுக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ள விருப்பமாக அமையும். இந்த புதிய அம்சம் உங்களின் தொடர்புகளில் இல்லாதவர்கள் உங்கள் புகைப்படத்தை பார்ப்பதை தடுக்க உதவுகிறது.

Online status off:

பயனர்கள் தங்களுடைய Online status ஐ மறைத்துக் கொள்ள முடியும். நீங்கள் ஆன்லைனில் ஆக்டிவாக இருந்தால் நீங்கள் whatsapp-யை பயன்படுத்துகிறீர்களா இல்லையா என்பதை யாராலும் அறிந்து கொள்ள முடியாது.

Two step verification:

பயனர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தி அவர்களின் whatsapp கணக்கை மீண்டும் பாதுகாப்பாக மாற்ற முடியும். இதற்கு உங்கள் கணக்கிற்கு சென்று இந்த ஆப்ஷனை இயக்க வேண்டும்