உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயணர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்டில் ஷார்ட் வீடியோ மெசேஜ் என்ற புதிய அம்சத்தை பயனர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த வசதியின் மூலமாக பயணங்கள் தங்களுடைய மெசேஜ்களை குறுகிய வீடியோக்களாக பிறருக்கு அனுப்ப முடியும்.

வாட்ஸ் அப்பை பொருத்தவரை பயனர்களால் டெக்ஸ்ட் அல்லது வீடியோ வடிவில் செய்திகளை ரிப்ளை செய்ய முடியும். ஆனால் இந்த புதிய அம்சம் மூலமாக பயனர்கள் இனி குறுகிய வீடியோக்களை பதிவு செய்து அதை உங்களுக்கு வந்த மெசேஜ்களுக்கு ரிப்ளை ஆக அனுப்பலாம். மேலும் இந்த வீடியோ ரிப்ளை அம்சம் அதிகபட்சமாக 60 வினாடிகள் வரை பதிவு செய்து ரிப்ளைவாக அனுப்ப முடியும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனைப் போலவே இந்த வீடியோ மெசேஜ்கள் எண் டு எண்ட் என்க்கிரிப்ட் மெசேஜ்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரோல் அவுட் செய்யப்பட்டு விட்ட நிலையில் விரைவில் அனைவரது whatsapp செயலிகளிலும் இந்த அம்சத்தை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.