இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் லேப்டாப் பயன்படுத்தி வருகின்றனர். அப்படி லேப்டாப் பயன்படுத்தும் போது அதிக வெப்பமானால் பல பிரச்சனைகள் ஏற்படும். இதனால் லேப்டாப்பின் செயல் திறனும் குறையும். எனவே லேப்டாப் இனி சூடாகாமல் இருக்க இதனை பாலோ பண்ணுங்க.

லேப்டாப்பை அணைக்காமல் நீண்ட நேரம் பயன்படுத்துவதால் சூடாகும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நேரம் உபயோகிக்காமல் இடையே சிறிது நேரம் அணைத்து வைப்பது நல்லது.

லேப்டாப்பை வெப்பமான இடத்தில் வைக்காமல் குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும்.

அதிக நேரம் உங்களுடைய தொடைகளில் வைத்து லேப்டாப்பை பயன்படுத்தினால் அதிக வெப்பம் ஏற்படக்கூடும்.

லேப்டாப் உள்ளே தூசி படிவதால் குளிரூட்டும் அமைப்பு சரியாக செயல்படாது. எனவே லேப்டாப் வெப்பம் ஆகாமல் இருக்க உட்புறத்தை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

லேப்டாப்பின் குளிரூட்டும் அமைப்பில் கோளாறு ஏதாவது இருந்தால் உடனடியாக சரிபார்ப்பு மையத்தில் கொடுத்து சரி செய்ய வேண்டும்.

குறிப்பாக அதிக நேரம் சார்ஜ் போட்டுக் கொண்டே லேப்டாப்பை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்

உங்களுடைய லேப்டாப் தொடர்ந்து சூடாகி வந்தால் லேப்டாப்பை ஒரு நிபுணரிடம் கொடுத்து செல்வது அவசியம்.