தூசுக்கள் நிறைந்த இடத்திலிருந்து விலகி நிற்க வேண்டும். பனி, இளங்காலை நேரத்தில் வெளியே வருவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு செல்லலாம். ஈரமான இடத்தில் நிற்பதை தவிர்க்க வேண்டும். மூக்கை பலமாக சிந்தக்கூடாது. மூக்குப்பொடி போடுவதை செய்யக்கூடாது.

துணி முனையை சுருட்டி மூக்கினுள் நுழைத்து செயற்கையாகத் தும்மலை வரவழைக்கக் கூடாது தும்மும் போது கைகளை மறைத்துக் கொண்டு தும்ம வேண்டும். வாயை திறந்து தும்மும்போது அருகில் இருப்பவர்களுக்கும் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. சைனஸ் இருப்பவர்கள் சூடான தண்ணீரில் யூகலிப்டஸ் ஆயிலை போட்டு ஆவி பிடிக்கலாம்.