காய்கறித் தோட்டம் அமைப்பதற்கு முதலில் எவ்வளவு அளவில் அமைக்க வேண்டும் என்று முடிவுசெய்து அதற்கேற்றவாறு நடவு செய்வது நல்லது. முதன் முதலில் தோட்டம் அமைப்பவர்கள் புதினா, கொத்தமல்லி, கீரை, மிளகாய் மற்றும் தக்காளி போன்ற செடிகளை வளர்க்கலாம். செடிகளுக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும், எவ்வளவு சூர்ய வெளிச்சம் தேவைப்படும் என்று முன்னரே தீர்மானிக்க வேண்டியது அவசியம். காய்கறி செடிகளைச் சுற்றியோ, அருகிலோ பூச்செடிகள் வளர்ப்பதைத் தவிர்க்கலாம்.

கீரை வகைகள், வெண்டைக்காய் போன்றவைகள் நடலாம். இதை நடவு செய்வதால் பூச்சி தாக்குதல் பெரிதளவில் இருக்காது. முதலில் நீங்கள் எந்த செடி வைத்தாலும் முதலில் செய்ய வேண்டியது சின்ன வெங்காயத்தை நட வேண்டும் அப்போது தான் நோய் தாக்குதலை தவிர்க்கலாம். கீரையை நடவு செய்தால் 25 நாட்களில் அறுவடை செய்து பயன்படுத்த முடியும். முள்ளங்கி, கொத்தவரை போன்றவற்றை அறுவடை செய்ய 45 நாட்களாகும்.