இந்திய சட்டத்தின் படி 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாகனம் ஓட்ட ஓட்டுனர் உரிமம் கட்டாயம். இந்த ஓட்டுனர் உரிமம் தொலைந்து விடும்போது புதிய ஓட்டுநர் உரிமம் பெறாமல் வாகனங்களை இயக்கினால் அபராதம் விதிக்க நேரிடும். இந்த புதிய வாகன ஓட்டுனர் உரிமத்திற்காக நீங்கள் அரசு அலுவலகத்திற்கு அலைய வேண்டாம். ஆன்லைன் மூலமாக புதிய ஓட்டுநர் உரிமத்திற்கு நீங்கள் எளிதில் விண்ணப்பிக்கலாம்.

அதற்கு முதலில் https://parivahan.gov.in என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று ONLINE SERVICES என்பதை கிளிக் செய்து DRIVING LICENCE RELATED SERVICES என்கிற ஆப்சனுக்குள் நுழைய வேண்டும்.

பிறகு  தமிழ்நாடு மாநிலத்தை தேர்வு செய்து DRIVING LICENCE என்ற பக்கத்திற்கு சென்று  SERVICES ON DL (புதுப்பித்தல்/ நகல்/ AEDL/ IDB/மற்றவை) இவற்றில் ஒன்றை தேர்வு செய்து CONTINUE கொடுக்கவும்.

பிறகு  ஓட்டுநர் உரிமத்தின் எண், பிறந்தநாள் தேதி ஆகியவற்றை பதிவு செய்து Continue கொடுத்து ISSUE OF DUPLICATE DL என்பதை கிளிக் செய்து ஓட்டுனர் உரிமம் தொலைந்த விளக்கத்தை அளிக்க வேண்டும்.

இறுதியாக விண்ணப்பப் படிவத்திற்கான பணத்தை செலுத்தி அதற்கான ரசீதையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.