பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வாடிக்கையாளர்களின் மத்தியில் மின்சார வாகனங்கள் நம்பகத்தன்மையை இழந்து உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின் படி, 2021 – 2023 வரை தயாரிக்கப்பட்ட மின்சார கார்கள் 79 விழுக்காடுகளுக்கு அதிகம் பிரச்னையை சந்தித்துள்ளது. ஜூன் 2022 – 2023 வரையிலான ஓராண்டில் மின்சார கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை 50 விழுக்காடு ஆக குறைந்துள்ளது. மின்சார வாகனங்களி்ல் பேட்டரி சார்ஜர், பேனல், உட்புற பாகங்களில் குறைபாடுகள் உள்ளதாக அறிக்கை முடிவில் தெரியவந்துள்ளது.