இன்றைய காலகட்டத்தில் அனைவருமே செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதில் வாட்ஸ் அப் செயலியை அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ் அப்பில் வரும் காணொளி, புகைப்படம் என அனைத்தும் உங்களுடைய செல்போன் கேலரியில் சேமித்து வைக்கப்படுகின்றது. இதனால் ஸ்டோரேஜ் நிரம்பி விட்டால் தொலைபேசியில் சிக்கல் ஏற்படக்கூடும். எனவே வாட்ஸ் அப்பில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போனில் சேமிக்கப்படுவதை தடுப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

முதலில் குறிப்பிட்ட நபர்களிடமிருந்து வரக்கூடிய புகைப்படம் மற்றும் காணொளியை மட்டும் போனில் வராமல் நிறுத்த வேண்டும் அல்லது நமது வாட்ஸ் அப்பில் இருக்கும் அனைத்து நபர்களிடம் இருந்து வருவதை நிறுத்த வேண்டும் என்றால் இரண்டு ஆப்ஷன்கள் காணப்படும். எந்த ஒரு புகைப்படம் காணொளியையும் சேமிக்க விரும்பவில்லை என்றால் முதலில் வாட்ஸ் அப்பை திறந்து அதன் வலது புறத்தில் உள்ள மூன்று புள்ளிகளை அழுத்தி settings – chats- media visibility என்ற விருப்பத்திற்குச் சென்ற ஆப் செய்து விடவும். குறிப்பிட்ட அரட்டைக்கு இவ்வாறு செய்ய வேண்டும் என்றால் அரட்டையை திறந்து அதன் பிறகு மேல் வலது புறத்தில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து view contact என்பதை தட்டவும். அதன் பிறகு மீடியா விசிபிலிட்டி ஆப்ஷனை ஆப் செய்து விடவும்.