டெல்லியில் நடந்த எல்ஜிபிடிகியூ (LGBTQ) பொதுக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தெருவோர நேர்காணல் வீடியோ ஒன்று, அதில் டெல்லி போலீஸ்காரர் ஒருவர் அளித்த அதிரடி பதிலால் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்தும் நபர் ஒருவர், அங்கிருந்த போலீஸாரிடம் “உங்கள் சொந்தக் குழந்தை ஓரினச்சேர்க்கையாளராக (Gay) இருந்தால் உங்கள் ரியாக்ஷன் என்ன?” என்று ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார்.
அதற்கு ஒரு போலீஸ் அதிகாரி, “கை விரல்கள் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதில்லை, ஒவ்வொரு மனிதனும் வித்தியாசமானவன்” என்று பக்குவமாகப் பதிலளித்தார்.
View this post on Instagram
ஆனால், அருகில் இருந்த மற்றொரு போலீஸ்காரரோ எந்தவொரு தயக்கமும் இல்லாமல், “ஹட்டி தோட் டெங்கே” (அவன் எலும்பை உடைத்துவிடுவேன்) என்று ஆக்ரோஷமாகப் பதிலளித்தது அங்கிருந்தவர்களை அதிரவைத்துள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி மில்லியன் கணக்கான பார்வைகளைக் கடந்துள்ள நிலையில், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவலரே வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியுள்ளார் என்று எல்ஜிபிடிகியூ ஆதரவாளர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
அதே நேரத்தில், இந்தியாவின் பல குடும்பங்களில் இன்னும் இருக்கும் பழமைவாத சிந்தனையைத்தான் அந்த போலீஸ்காரர் வெளிப்படுத்தியுள்ளார் என்று மற்றொரு தரப்பினர் ஆதரவாகப் பேசி வருவதால் இணையத்தில் பெரும் கருத்து மோதல் வெடித்துள்ளது.
