குஜராத் மாநிலம் பாலன்பூர் அருகே தன் மனைவியைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்த கணவனே, அவரைத் தனது நண்பர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு விற்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கணேஷ்புராவைச் சேர்ந்த நிகேஷ் என்ற நபர், தனது மனைவியை வீட்டை விட்டு துரத்த திட்டமிட்டு, தனது நண்பர்களிடம் 50 ஆயிரம் ரூபாய்க்குப் பேரம் பேசி அவரை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்ற கும்பல், ஆள் இல்லாத இடத்தில் அடைத்து வைத்து 10 நாட்களுக்கும் மேலாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரிடமிருந்த நகைகளையும் பறித்துக் கொண்டுள்ளது.

காணாமல் போன பெண்ணை மீட்ட போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் இந்த உண்மை தெரியவந்ததை அடுத்து, நாடகமாடிய கணவன் நிகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சஞ்சய், அசோக், சச்சின் தர்பார் உட்பட மொத்தம் 7 பேரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.