ஹைதராபாத்தின் முஷீராபாத் பகுதியில் உள்ள வங்காளதேசம் மார்க்கெட் அருகே, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பலியிடப்பட்ட விலங்குகளின் இரத்தம் தெருக்களில் ஆறாக ஓடுவதாகக் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் சட்டப் பிரிவு இணை அமைப்பாளர் நீலம் பார்கவ ராம் என்பவர் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள நிலையில், அதில் அங்கிருக்கும் பெண்கள் சிலர் தங்களின் ஆத்திரத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தும் சத்தமும் கேட்கிறது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பொது இடங்களில் சுகாதாரத்தைப் பேண வேண்டும் என்றும், மிருக வதைக்கு எதிராக ‘பெட்டா’ (PETA India) அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்
Streets of Musheerabad, Hyderabad…
I was surprised an entire area is named as Bangladesh by locals in Hyderabad, Telangana
Blood flowing from Bangladesh Market area to Hindu streets in Musheerabad.
Just listen to Hindu women shouting at them. pic.twitter.com/aNu0RSRinm
— Advocate Neelam Bhargava Ram (@nbramllb) May 28, 2026
.
அதே நேரத்தில், இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் மத ரீதியான விவாதங்களாகவும், தேவையற்ற பதற்றங்களாகவும் மாறி வரும் நிலையில், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மத வழிபாடுகளைப் பொறுப்புடன் நடத்த வேண்டும் என்றும், யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வீடியோவின் உண்மைத்தன்மை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத நிலையில், இது இணையத்தில் தொடர்ந்து பேசுபொருளாக நீடித்து வருகிறது.
