கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் அதிர்ச்சிகரமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ராட்டினத்தில் பொதுமக்கள் பலர் ஏறி மகிழ்ச்சியாகச் சுற்றிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ராட்டினத்தின் கம்பி திடீரென உடைந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் உட்பட பலருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி காயமடைந்த அந்த 5 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு, திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால் அங்கு பெரும் பரபரப்பும் சோகமும் நிலவி வருகிறது.
