வருமான வரி கணக்கு தாக்கல், வணங்கி கணக்கு தொடங்குதல், கடன் வாங்குதல் போன்ற முக்கிய மூன்று தேவைகளுக்கு பான் கார்டு முக்கியமானதாக விளங்கி வருகிறது. இந்த பான் கார்டில்  ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை கட்டாயமாக திருத்தம் செய்ய வேண்டும். தற்போது எப்படி வீட்டில் இருந்தபடியே பான் கார்டில் இருக்கும் தவறுகளை  திருத்தம் செய்வது என்பது குறித்து பார்க்கலாம். அதற்கு முதலில் NSDL இது அதிகாரப்பூர்வ  போரட்டலுக்கு  சென்று அதில் பான் கார்டு திறப்பவதற்கான விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் உங்களுடைய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர் டோக்கன் எண் மற்றும் இணைப்பு உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு  அனுப்பப்படும். அதன் பிறகு மெயில் ஐடிக்கு வரும் அந்த லிங்கை கிளிக் செய்து பான் கார்டு புதுப்பிப்பதற்கான பக்கத்தை திறந்து அதில் உங்களுடைய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பிறகு அதில் கேட்கப்படும் ஆவணங்களை பதிவு செய்து பணம் செலுத்தும் செயல்முறையை தொடர வேண்டும். இந்த முழு செயல்முறையையும் படித்து முடித்த பிறகு தபால் மூலமாக தேவையான தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும். இந்த தகவல்களை அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகு புதிய பான் கார்டு உங்களுடைய முகவரிக்கு அனுப்பப்படும்.