பொதுவாக ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்நாளில் மூன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு பயன்படுத்தி வருகிறார்கள். பள்ளியில் படிக்கும் போது ஒரு கணக்கு, வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளத்தை டெபாசிட் சம்பள கணக்கு, என ஒருவரே எக்கச்சக்கமான சேமிப்பு கணக்கை வங்கிகளில் வைக்கின்றார். இந்த நிலையில் ஒரேயொரு வங்கிக் கணக்கிலிருந்து அன்றாட செலவுகளை டிஜிட்டல் பணப்பரிமாற்றம் வழியே மேற்கொள்வது ஆபத்தை விளைவிக்கலாம் என சைபர் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

மோசடி நபர்களிடம் உங்கள் வங்கிக் கணக்கு விவரம் சிக்குவதை தவிர்க்க மற்றொரு கணக்கை வைத்துக்கொண்டு, அதில் செலவிட தேவையான சிறிய தொகையை பரிமாற்றம் செய்து பயன்படுத்துவது உங்களது பணம் பறிபோகாமல் பாதுகாக்க உதவும் என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள்!