கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் மூன்று வயது குழந்தை வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் சாலையில் நின்று அழுது கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த பெண் குழந்தையை மீட்டு வீட்டு விலாசம் உள்ளிட்ட விபரங்களை கேட்டனர்.
அழுது கொண்டே வீட்டை காண்பிக்கிறேன் என கூறி அந்த குழந்தை போலீசாரின் இரு சக்கர வாகனத்தில் ஏற மறுத்துவிட்டது. பின்னர் நடந்தே சென்று வீட்டை அடையாளம் காண்பித்தது. குழந்தை சாலையில் நடந்து முன்னே செல்ல போலீசார் பின் தொடர்ந்து சென்றனர்.
இதனையடுத்து பெற்றோரை பார்த்ததும் ஓடி சென்று அவர்களை கட்டிப்பிடித்து சந்தோஷப்பட்டதை பார்த்து போலீசார் ஆச்சரியப்பட்டனர். பின்னர் குழந்தையின் பெற்றோரிடம் இப்படி தனியாக அவர்களை கடைக்கு அனுப்பக் கூடாது என போலீசார் அறிவுரை கூறியுள்ளனர்.
https://t.co/t8aQRpon85#hosur #child #parents #thanthitv
— Thanthi TV (@ThanthiTV) August 26, 2025
