முதலீடுகளில் பாதுகாப்பான மற்றும் அதிக வட்டி வழங்கக்கூடிய முதலீடுகளில் ஒன்று தான் பொது வருங்கால வைப்பு நிதி என அழைக்கப்படும் Public Provident Fund. PPF என்பது வரிசலுகையுடன் கூடிய திட்டம் ஆகும். இத்திட்டத்தில் உங்களுக்கு உத்தரவாதத்துடன் வரி இல்லாத வருமானம் கிடைக்கும். அதோடு  வருமான வரி விலக்கும் உண்டு.

PPF சென்ற சில தசாப்தங்களாக பல்வேறு முதலீட்டாளர்களுக்கு விருப்பமான முதலீட்டு சாதனமாக இருந்து வருகிறது. காரணம் PPF கணக்கில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் பலன்கள் ஆகும். ஆகவே தங்கள் குழந்தையின் பெயரில் PPF கணக்கை தொடங்கலாம். PPF கணக்கின் மிகப் பெரிய நன்மை 15 வருடங்கள் லாக்-இன் காலம் ஆகும். அதன்படி, முதலீடு செய்யும் பணத்தை 15 வருடங்களுக்கு எடுக்க முடியாது. பின் தங்கள் குழந்தை வயது வந்ததும் கணக்கை அவர்கள் செயல்படுத்தலாம். ஒரு ஆண்டில் நீங்கள் (அ) உங்கள் குழந்தையின் கணக்கில் ரூ.1.5 லட்சம் மட்டுமே முதலீடு செய்ய இயலும்.