சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மக்களை ஏமாற்ற சைபர் குற்றவாளிகள் புதிய தந்திரங்களைக் கண்டுபிடித்து வருகின்றனர். சமீபகாலமாக, IPPB வங்கிக் கணக்குகளில் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் செய்திகள் அனுப்பப்படுகின்றன. 24 மணி நேரத்திற்குள் PAN CARD வங்கிக் கணக்கில் அப்டேட் செய்யாவிட்டால் கணக்கு முடக்கப்படும் என்ற செய்திகளுக்கு PIB FactCheck பதிலளித்துள்ளது. IPPB அப்படியொரு செய்தியை யாருக்கும் அனுப்பவில்லை, அது போலியானது என தெரிவித்துள்ளது.