பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். ரயில்வே பயணத்திற்காக டிக்கெட்டை புக் செய்துவிட்டு சில எதிர்பாராத காரணங்களால் அதனை ரத்து செய்கின்றனர். அப்படி ரத்து செய்யும்போது முழு பணத்தையும் திரும்ப பெற சில வழிகள் இருக்கிறது. இந்நிலையில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன்(IRCTC) ஆனது பயணிகளின் திடீர் பயண தேவைகளுக்காக டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு தட்கல் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

அதன் மூலம் ஒரு நாள் முன்னதாக பயணிகள் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். ஆனால் தட்கல் முறையில் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்தாலும் ரயில்வே வாரியத்தால் பயணிகளுக்கு மீண்டும் கட்டணம் அளிக்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து விவரங்களை பார்க்கலாம். ரயில் திசை மாறிய பாதை, போர்டிங் ஸ்டேஷன் அல்லது சேருமிடம் அல்லது இரண்டு ரயில் நிலையங்களும் திசை திருப்பப்பட்ட பாதையில் இல்லை என்றால் முழு பணம் திரும்ப அளிக்கப்படும்.

தட்கல் டிக்கெட் காத்திருப்பில் இருந்தால், சிறிய தொகை கழிக்கப்பட்டு மீதமான தொகை பயணிகளுக்கு திரும்ப அளிக்கப்படும். விபத்து, வெள்ளம் போன்ற காரணங்களால் ரயில் ரத்து செய்யப்பட்டால், ரயில் புறப்பட உள்ள மூன்று நாட்களுக்குள் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் முழு பணம் திரும்ப அளிக்கப்படும். பயணிகளின் பயணம் தொடங்குவதற்கு புள்ளியும், ஏறும் புள்ளியும் வேறுபட்டால் முழு பணம் அளிக்கப்படும். திசை மாறிய பாதையில் ரயிலை இயக்கினால், பயணிகள் பயணிக்க தயாராக இல்லை என்றால் முழு பணம் திரும்ப கொடுக்கப்படும்.