நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் என்பது மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. பிறந்த குழந்தைகள் முதல் அனைவருக்கும் ஆதார் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் கட்டாயம் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த நிலையில் குழந்தைகளுக்கான ஆதார் குறித்த விவரங்கள் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. பிறந்த குழந்தைகள் முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும். இதில் குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் தகவல்கள் பதிவு செய்யப்படுவதில்லை.

அதற்கு பதிலாக அவர்களுடைய பெற்றோர்களின் யூஐடியுடன் குழந்தைகளின் யூஐடி இணைக்கப்பட்டு ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. குழந்தைகள் ஐந்து வயது கடந்த பிறகு ஆதார் அட்டைகளை புதுப்பித்துக்கொள்ள முடியும். இதற்கு பொதுமக்கள் UIDAI  இணைதளத்தில் சென்று புதிய ஆதார் அட்டைக்கான விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். குழந்தைகள் பெயர் மற்றும் பெற்றோரின் தொலைபேசி எண், தேவையான விவரங்களை உள்ளிட்டு பக்கத்தில் உள்ள ஆதார் சேவை மையத்தில் முன்பதிவு செய்து அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி குழந்தைகளுக்கான ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம்.