மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் திர்குரா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் விடுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் திடீரென சோதனை நடத்திய நிலையில் பெண்கள் சிலர் குட்டை பாவாடை அணிந்தேன் நடனம் ஆடினர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி குட்டை பாவாடை அணிவது ஆத்திரமூட்டும் வகையில் நடனம் ஆடுவது சைகைகள் செய்வது ஆகியவை ஆபாசமான செயல்களாக கருத முடியாது என்ற நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இன்றைய காலத்தில் பெண்கள் நடனம் ஆடுவது சாதாரணமான ஒன்றாக மாறிவிட்ட நிலையில் இதில் முற்போக்கான பார்வையை நாம் தவிர்க்க வேண்டும் எனவும் இந்த விவகாரத்தில் காவலர்கள் செய்த வழக்கு ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.