விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்தே கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் புது புது தலைப்புகளுடன் விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ காட்சி வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி இந்த வாரம் தன்னுடன் நடனமாட சொல்லும் மனைவி மற்றும் ஆட மறுக்கும் கூச்சப்படும் கணவன் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று உள்ளது.

அதில் தன்னுடன் நடனமாட தயங்கும் கணவர்களை பெண்கள் விடாமல் டார்ச்சர் செய்து ஆட வைப்பது மட்டுமல்லாமல் அவர்களை பேச முடியாத அளவிற்கு மூச்சு திணறவும் செய்கின்றன. இதனைப் பார்த்த கோபிநாத் சிரிப்பை அடக்க முடியாமல் இருக்க அப்பாவியாக நின்ற கணவர்களை பார்க்க மிகவும் பாவமாக இருந்த நிலையில் தற்போது அந்த ப்ரோமோ வீடியோ வைரல் ஆகி வருகிறது.