2021 ஆம் ஆண்டுக்கான 69 வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார். அதன்படி கன்னட மொழியில் சிறப்பு திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது 777 சார்லி படம். மலையாள மொழியில் சிறப்பு திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது ஹோம் படம். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கடைசி விவசாயி திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி விவசாயி திரைப்படத்தில் நடித்த நல்லாண்டிக்கு சிறப்பு பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பாடல்கள் பிரிவில் ‘புஷ்பா’ படத்திற்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு விருது வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான விருது மிமி திரைப்படத்திற்காக பங்கஜ் திரிபாதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இரவின் நிழல் படத்தின் ‘மாயவா’ பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை வென்றார். ஸ்ரேயா கோஷல். கருவறை ஆவணப்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த கல்வி திரைப்படமாக சிற்பங்களின் சிற்பங்கள் ஆவணப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது

சிறந்த நடிகருக்கான தேசிய விருது ‘புஷ்பா’ திரைப்படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான விருதை முறையே ‘கங்குபாய் கத்தியவாடி’ மற்றும் ‘மிமி’ படத்திற்காக ஆலியா பட் மற்றும் கிருத்தி சனோன் பகிர்ந்து கொண்டனர். சிறந்த திரைப்படத்திற்கான விருது மாதவன் இயக்கி நடித்த ‘ராக்கெட்ரி’ படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகைக்கான விருது ‘காஷ்மீரி பைல்ஸ்’ திரைப்படத்தில் நடித்த பல்லவி ஜோஷிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நடன இயக்குனர் பிரேம் ரக்ஷித், தொழில்நுட்ப கலைஞர் சீனிவாஸ் மோகனுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பின்னனி பாடகருக்கான விருதை ஆர்.ஆர்.ஆர் படத்தில் பாடிய பாடலுக்காக கால பைரவா பெற்றார். பின்னணி இசைக்கான தேசிய விருது ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக இசையமைப்பாளர் கீரவாணிக்கு கிடைத்துள்ளது. ஆர்.ஆர்.ஆர் படத்தின் சண்டை வடிவமைப்பாளர் கிங் சாலமனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.