‘புஷ்பா’ படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 69வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே இப்படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சுகுமார் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அனுசுயா பரத்வாஜ், ராவ் ரமேஷ், அஜய் கோஷ், தனஞ்ஜெயா, ஜெகதீஷ் பிரதாப் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர். பாக்ஸ் ஆபிசில் ரூ.375 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.