பள்ளி, கல்லூரியில் ஆசிரியர்கள் பொதுவாக பக்குவமான பதில்களுக்குத் தான் மதிப்பெண்கள் தருவார்கள் என்றாலும், சில நேரங்களில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் பதில்களும் அவர்களைச் சந்தோஷப்படுத்துகின்றன. அந்த வகையில், சமீபத்தில் ஒரு கணித ஆசிரியர் மதிப்பீடு செய்த பேப்பரில், மிகவும் வேடிக்கையான பதிலைப் பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளார். அந்த மாணவர், நான்காவது கேள்விக்கு பதிலளிக்கும் இடத்தில் கணிதம் தொடர்பான பதில் ஏதும் எழுதாமல், “நமக்குத் தெரியாது numerical, நமக்குத் தெரியாது solution, நமக்குத் தெரியாது answer, அப்போ நமக்கென்ன வேணும்? Fanta-Fanta, நமக்கு வேணும் Fanta-Fanta” என பாடலாக எழுதி விட்டார்.
மாணவர் எந்த ஒரு கணித விளக்கத்தையும் தராமல், நேரடியாக ‘Humko Fanta Mangta’ என பேப்பரில் எழுதி நிரப்பியிருப்பது அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக ‘rvcjinsta’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பதிலின் படம் பதிவேற்றப்பட்டு, இதுவரை 4 லட்சம் பார்வைகளையும், நூற்றுக்கணக்கான கருத்துகளையும் பெற்றுள்ளது.
அதனை பார்த்த நெட்டிசன்கள், “சின்ன வயதில் நாமும் இப்படி ஏதாவது எழுதிருக்கணும்” என தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், ஆசிரியர் அந்த மாணவருக்கு எழுதிய பதில் தான் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது — “Office-ல சந்திக்கலாம்!” எனக் குறிப்பிட்டு விட்டுள்ளார். இதை பார்த்த அனைவரும் ஆசிரியரின் கூலான பதிலை பாராட்டுகின்றனர்.
View this post on Instagram
