நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தனது வங்கியின் சம்பளம் பெறும் ஊழியர்கள், குடும்பங்கள், தனிநபர்கள் மற்றும் இளைஞர்கள் போன்ற அனைத்து விதமான பிரிவுகளுக்குமான மேம்பாட்டு சேமிப்பு கணக்குகளை அறிமுகப்படுத்துவதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மேம்பட்ட சேமிப்பு கணக்குகளின் மூலமாக தனிநபர் விபத்து இறப்பு காப்பீட்டு தொகை அம்சம் வழங்கப்படும்.

அதேசமயம் பிளாட்டினம் அக்கவுண்ட், சர்வதேச டெபிட் கார்டு, ஏடிஎம் சில்லறை கடனுக்கான சலுகை வெட்டி மற்றும் விகிதம் செயலாக கட்டணங்கள் தள்ளுபடி கிரெடிட் கார்டுகளை இலவசமாக வழங்குதல் மற்றும் ஐந்து லட்சம் வரை அதிக பயன்பாட்டு வரம்பு போன்ற பல அம்சங்களை இலவசமாக அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் வங்கியின் வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு சேவைகளை பெற மொபைல் எண்ணை வங்கியுடன் இணைக்க வேண்டும் எனவும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் இந்த செயல்முறையை முடிக்கவில்லை என்றால் டெபிட் கார்டு சேவைகள் முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.