தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஈரோட்டில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசி வருகிறார். அவர் பேசியதாவது, உங்களை நம்பி தான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன் என்னை கைவிட்டு விடாதீர்கள். எனக்காக இறுதி வரை நிற்பீர்களா. உங்களுக்காக நானும் வாழ்நாள் முழுவதும் இறுதிவரை நிற்பேன் என்றார். அதன் பிறகு நல்ல காரியத்தை தொடங்குவதற்கு முன்பாக மஞ்சள் எடுத்து வைத்து விட்டு தொடங்குவார்கள். மஞ்சள் என்றாலே தனி Vibeதான்.

நம் கட்சியின் கொடியில் கூட மஞ்சள் உள்ளது. ஈரோடு கடப்பாரை பெரியார். தமிழ்நாட்டையே திருப்பி போட்ட நெம்புகோல். நூறு வருடங்களுக்கு முன்பாகவே வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கேட்டவர் பெரியார். உங்களுக்கு நீங்க கொள்ளையடிச்சு வச்சிருக்க காசுதான் துணை. எனக்கு என் மேல் எல்லையில்லா பாசம் வைத்திருக்கிற மாஸ் தான் துணை என்று கூறினார். மேலும் இந்த கூட்டத்தில் ஏராளமான ரசிகர்களும் தொண்டர்களும் நடிகர் விஜய்யின் பேச்சை கேட்க ஆர்வமாக கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.