தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று ஈரோட்டில் பிரமாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் ஏராளமான தொண்டர்களும் ரசிகர்களும் அதிகாலை முதலே நடிகர் விஜயை காண ஆர்வத்துடன் திடலுக்கு வந்தனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் காலை 11.15 மணி அளவுக்கு வருகை புரிந்துள்ள நிலையில் நிகழ்ச்சியில் தற்போது அவர் பேசி வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் விஜயின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு சிறுவனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இருப்பினும் அந்த சிறுவனுக்கு உடனடியாக முதலுதவி கொடுத்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் முன்னதாக நடிகர் விஜய் பொதுக்குழு கூட்டங்களுக்கு கர்ப்பிணி பெண்கள் முதியவர்கள் மற்றும் குழந்தைகளை அனைத்து வரக்கூடாது என அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.