தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய்க்கும், அரசியல் விமர்சகர் பொன்ராஜுக்கும் இடையே வெடித்துள்ள மோதல் இப்போ உச்சகட்டத்தை எட்டியிருக்கு. விஜய் ரசிகைகளையும் தவெக பெண் தொண்டர்களையும் ‘விபச்சாரிகள்’ எனப் பொன்ராஜ் தரம் தாழ்ந்து விமர்சித்ததாகக் கூறி, விஜய் நேராக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
“என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவாகப் பேசும் திமுகவின் கைக்கூலி” என விஜயும் எக்ஸ் தளத்தில் மிகக் காட்டமாகப் பதிவிட்டிருந்தார். திமுக அரசு இதுபோன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், வரும் தேர்தலில் ‘தாய்க்குலம்’ திமுகவுக்குப் பாடம் புகட்டும் என்றும் விஜய் ஆவேசமாகத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பொன்ராஜ் வெளியிட்டுள்ள பதிவு இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. “ஆதாய சூதாடி நீங்களா அல்லது நானா?” எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், விஜய் மீது உயிருக்கு உயிராக இருக்கும் பெண்கள் பொதுவெளியில் தரம் தாழ்ந்து பேசுவதை விஜய் ரசித்துக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
“உங்களுக்காகக் காயம்பட்டு உயிர்நீத்த இளைஞர்களின் குடும்பப் பெண்களிடம் முதலில் மன்னிப்பு கேளுங்கள்” என விஜய்க்குப் பாடம் எடுத்துள்ள பொன்ராஜ், தனக்கும் தன் குடும்பத்திற்கும் வரும் மிரட்டல் அழைப்புகளுக்கு விஜய்தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.
தான் எந்தப் பெண்ணையும் பொதுவாக இழிவுபடுத்தவில்லை என்றும், கலாச்சாரச் சீர்கேட்டை உருவாக்குபவர்களையே விமர்சித்ததாகவும் அவர் பிடிவாதமாகத் தெரிவித்துள்ளார். இந்த ‘விஜய் vs பொன்ராஜ்’ விவகாரம் சமூக வலைதளங்களில் ஒரு போர்க்களத்தையே உருவாக்கியுள்ளது.
