இந்தியர்களுக்கு ஆதார் அட்டை மிகவும் முக்கியமான ஆவணமாக உள்ளது. அனைத்து முக்கியமான அரசு சார்ந்த திட்டங்களுக்கும் ஆதார் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது. சிலர் தங்களுடைய கவனக்குறைவால் ஆதார் அட்டையை தொலைத்து விட்டு அதனைப் பெற திண்டாடி வருவதுண்டு. ஆதாரை தொலைத்தவர்கள் உடனடியாக புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு https://resident.uidai.gov.in/lost-uideid என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். பெயர், மொபைல் எண், அஞ்சல் ஐடி மற்றும் கேப்சா ஆகியவற்றை உள்ளிடவும், அதன் பிறகு மொபைலுக்கு ஓடிபி அனுப்பப்படும். அதனை உள்ளிட்டு உங்கள் விவரம் அடங்கிய செய்தி ஒன்று தோன்றும். அதன் பிறகு உங்கள் ஆதார் அட்டையை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்